×

சொத்தின் ஆண்டு மதிப்பின் மீது பள்ளிகளில் கல்வி வரி வசூலிக்கும் மசோதா: அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 91ம் பிரிவில் கல்வி வரி விதித்தல் மற்றும் வசூலித்தல் என்ற பிரிவு சேர்க்கப்பட வேண்டும். அதன்படி, நிலங்கள், கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தின் மீதுள்ள அல்லது இணைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆகியவற்றின் ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்திற்கு மிகாத அளவில் உள்ளாட்சி மன்றத்தினால் நிர்ணயிக்கப்படும் வீதத்தில் கல்வி வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அந்த வரியை வசூலிக்கலாம். சொத்தின் ஆண்டு மதிப்பின் மீது மாநகராட்சி, நகராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை கல்வி வரியை வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை திருத்துவதற்காகவும், அதை செயல்படுத்துவதற்காகவும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

The post சொத்தின் ஆண்டு மதிப்பின் மீது பள்ளிகளில் கல்வி வரி வசூலிக்கும் மசோதா: அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,K.N. Nehru ,Urban Local Government ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழகம் சார்பில்...